/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பாராட்டு
/
மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 15, 2024 04:06 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், மார்கழி மாதம் முழுதும் அதிகாலையில் சுந்தரேசுன் ஓதுவார் தலைமையிலான பஜனை குழுவினருடன், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பஜனையாக பாடியபடி, ஏகாம்பரநாதர் கோவில் மாட வீதிகளில் வலம் வந்தனர்.
தொடர்ந்து 30 நாட்களும் பஜனையில் பங்கேற்றவர்களுக்கு, நிறைவு நாளான நேற்று, பஜனை குழுவினர் மற்றும் சிறுவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில், மாணவ- - மாணவியர் மற்றும் பஜனை குழுவினருக்கு, பகுதியினர் சார்பில், கவுரவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து ஆன்மிக புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
குன்றத்துார் அருகே, சோமங்கலம் கிராமத்தில், 950 ஆண்டுகள் பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. சிதிலமடைந்து இருந்த இந்த கோவில், கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டு, சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது.
இந்த கோவிலில், 25 ஆண்டுகளாக மார்கழி மாதம் தினமும், அதிகாலை 5:30 மணி அளவில் திருப்பாவை சேவித்தல் நடந்தது.
இந்தாண்டு திருப்பாவை சேவித்தலில் பங்கேற்ற சிறுவர்கள், பெண்களுக்கு மார்கழி மாதத்தின் இறுதி நாளான நேற்று, கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.