ADDED : பிப் 13, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓரிக்கை : காஞ்சிபுரம் ஓரிக்கை, பேராசிரியர் நகர் 2ல், குபேர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோடீஸ்வரர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், ராமபக்த அனுமன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு முடிவதாலும், தன்வந்திரி பாபா, கால பைரவர் சன்னிதிக்கு, 6ம் ஆண்டு நடைபெறுவதால், கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. கோவிலில் உள்ள அனைத்து விக்ரஹங்களுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.