/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிலாம்பாக்கத்தில் 5 கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
சிலாம்பாக்கத்தில் 5 கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
சிலாம்பாக்கத்தில் 5 கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
சிலாம்பாக்கத்தில் 5 கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 03, 2025 01:13 AM

உத்திரமேரூர்: சிலாம்பாக்கத்தில் உள்ள ஐந்து கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தாலுகா, சிலாம்பாக்கம் கிராமத்தில் செல்வ விநாயகர், கங்கையம்மன், மாரியம்மன், செல்லியம்மன், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்கள் உள்ளன.
இந்த கிராம கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த மக்கள் தீர்மானித்தனர். அதையடுத்து, புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் முடிக்கப்பட்டு, இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
முன்னதாக, காலை 6:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், காலை 7:00 மணிக்கு, துவார பூஜை, 108 மூலிகை பொருட்களால் மஹா யாகம் செய்யப்பட்டது.
காலை 10:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட கலச நீரானது, ஐந்து கோவில்களின் கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று சுவாமிகளின் அருள் பெற்று சென்றனர்.

