/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்டரை கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
தண்டரை கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூன் 01, 2025 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, தண்டரை கிராமத்தில் குந்தியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று, காலை 9:00 மணிக்கு, குந்தியம்மன், மாரியம்மன் கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

