/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : மே 11, 2025 11:55 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றம் மஹாலஷ்மி நகரில், விஜய கணபதி, லக்ஷ்மி ஹயக்ரீவர், பக்த ஆஞ்சநேயர், கண்டி கதிர்காமவேல் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 5:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது.
காலை 7:30 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும், காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும் நடந்தது.
செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடு பிருந்தாவனம் நகரில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10ம் தேதி, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று, காலை 9:00 மணிக்கு கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்கார மற்றும் மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது.