/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோழியாளம் ஆலயத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
கோழியாளம் ஆலயத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
கோழியாளம் ஆலயத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
கோழியாளம் ஆலயத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 17, 2025 08:01 AM

உத்திரமேரூர்: -கோழியாளம் ஆலயத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த, கோழியாளம் கிராமத்தில் ஆலயத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் செய்ய, கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், இக் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு கணபதி பூஜை, தனபூஜை, கோ பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு, மஹா பூர்ணாஹிதி, யாக வேள்வி ஆகியவை நடந்தது.
காலை 9:40 மணிக்கு யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலச நீர், அங்குள்ள அம்மன் சிலை மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.