/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : அக் 31, 2025 10:08 PM
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, காஞ்சிவாக்கத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
படப்பை செரப்பனஞ்சேரி அருகே, காஞ்சிவாக்கம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்து, அண்மையில், பாலாலையம் செய்தனர்.
இதையடுத்து, கர்ப்பகிரஹம் செப்பனிடப்பட்டு, புதிதாக விநாயகர், முருகனோடு கூடிய முன் அலங்கார மண்டபம் கட்டப்பட்டு, கோவில் முழுதும் வர்ணம் தீட்டப்பட்டது.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கி, மஹாகணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.
நேற்று, காலை 9:30 மணிக்கு, பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசங்களில் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், காஞ்சிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

