/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
/
விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 14, 2025 12:39 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர், பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரத்தில் செல்வ விநாயகர் மற்றும் தேவி கருமாரியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் விமானத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும், தேவி கருமாரியம்மன் கோவில், பரிவாரம் மற்றும் நவக்கிரஹங்களுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
காலுார்
காஞ்சிபுரம் அடுத்த காலுார் கிராமத்தில் உள்ள மாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதிதாக செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கரிகோலம் நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர விமானத்தில் உள்ள மாரி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
கிதிரிப்பேட்டை
வாலாஜாபாத் ஒன்றியம், கிதிரிப்பேட்டையில், தண்டு முத்து மாரியம்மன் அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது.
நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடும், 10:30 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புளியம்பாக்கம்
வாலாஜாபாத் அடுத்த, புளியம்பாக்கத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று, காலை 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
காக்கநல்லுார்
உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுார் பகுதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று, காலை 9:00 மணிக்கு, புனிதநீர், கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.