sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செவிலிமேடு செல்லியம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை

/

செவிலிமேடு செல்லியம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை

செவிலிமேடு செல்லியம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை

செவிலிமேடு செல்லியம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : மே 03, 2025 01:21 AM

Google News

ADDED : மே 03, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடில் செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் கோவில் உள்ளது. இதில், செல்லியம்மன், மாரியம்மன் கோவில்களுக்கு, புதிதாக கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த மாதம் 30ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜையும், மாலை 6:-00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடும், தொடர்ந்து செல்லியம்மன், மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கும், 10:00 மணிக்கு செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

காலை 11:00 மணிக்கு மஹா அபிேஷகமும், மாலை 6:00 மணிக்கு செல்லியம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு ஆக்கூர் பச்சையம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடந்தது.. விழாவிற்கான ஏற்பாட்டை செவிலிமேடு கிராமத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us