sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை கும்பாபிஷேகம்

/

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை கும்பாபிஷேகம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை கும்பாபிஷேகம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை கும்பாபிஷேகம்


ADDED : செப் 27, 2024 07:38 PM

Google News

ADDED : செப் 27, 2024 07:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், பாலதர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஐம்பொன்னால் ஆன மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சிலை புதிதாக செய்யப்பட்டுள்ளது. இச்சிலையின் கும்பாபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

விழாவையொட்டி நாளை, காலை 9:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், புதிதாக செய்யப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு லலிதா த்ரிஷதி ஹோமம், கன்னியம்மனுக்கு மூல மந்திர ஹோமம் நடக்கிறது.

காலை 10:30 மணிக்கு பாலதர்ம சாஸ்தா ஹோமமும், காலை 11:00 மணிக்கு ஐம்பொன் மீனாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகமும், பிற்பகல் 12:15 மணிக்கு பாலதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும், மஹாதீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

மாலை 6:30 மணிக்கு மதுரை மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.






      Dinamalar
      Follow us