/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரசன்ன பெருமாளுக்கு 24ல் கும்பாபிஷேகம்
/
பிரசன்ன பெருமாளுக்கு 24ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 21, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குபேட்டை நடுத்தெருவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை துவங்கியது.
கும்பாபிஷேக தினமான நாளைமறுதினம், காலை 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.