/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கீழ்கதிர்பூரில் வரும் 11ல் கும்பாபிஷேகம்
/
கீழ்கதிர்பூரில் வரும் 11ல் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 08, 2024 09:43 PM
கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் அருணாசலேஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நுாற்றாண்டை கடந்த இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர், அறங்காவலர் விழாக் குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோவில்களில் பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன், யாகசாலை பூஜை துவங்குகிறது.
நாளை மறுநாள், காலை 9:25 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை 9:40 மணிக்கு கோவில் கோபுர விமானம் மற்றும் பரிவாரங்களுக்கும் மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி வேத விற்பன்னர்கள் வாயிலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
காலை 10:30 மணிக்கு மூலவருக்கு மஹா அபிஷேகமும், 11:30 மணிக்கு மஹா தீபாராதனையும் நடக்கிறது.

