/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ல் கும்பாபிேஷகம்: அமைச்சர்
/
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ல் கும்பாபிேஷகம்: அமைச்சர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ல் கும்பாபிேஷகம்: அமைச்சர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ல் கும்பாபிேஷகம்: அமைச்சர்
ADDED : அக் 13, 2025 01:27 AM

காஞ்சிபுரம்:''காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில், டிச., 8ல் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில், நேற்று காலை நடந்த தங்க முதலீடு செய்யும் திட்டத்திற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கைத்தறி துறை அமைச்சர் காந்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ரவிச்சந்திரபாபு முன்னிலையில், 53.386 கிலோ தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கி காஞ்சிபுரம் மண்டல மேலாளர் செந்தில் குமாரிடம் அமைச்சர்கள் ஒப்படைத்தனர்.
அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், 42.326 கிலோ; குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 2.640 கிலோ, திருவிடந்தை நித்தியகல்யாணபெருமாள் கோவிலில், 4.070 கிலோ, திருமலை வையாவூர் பிரசன்னவெங்கடேசப்பெருமாள் கோவிலில், 4.350 கிலோ என 53. 386 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
அதை, பாரத ஸ்டேட் வங்கியில், தங்க முதலீடு திட்டத்தில், முதலீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 28.99 கோடி செலவில் 38 திருப்பணிகள் நடக்கின்றன.
இதில், 12 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நிலுவை பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, டிச., 8ல் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.