/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 01, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, வரதாபுரம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் அதிகாலையில், முத்துமாரியம்மன் சிலை கரிக்கோல ஊர்வலம் நடந்தது. மாலையில், கணபதி பூஜை மற்றும் யாக சாலை பூஜையுடன் துவங்கியது.
இன்று, காலை 8:30 மணிக்கு கலசப் புறப்பாடும், அதை தொடர்ந்து, 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.