/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்ணன்தாங்கல் சக்திபீடத்தில் நாளை குங்கும வேள்வி
/
கண்ணன்தாங்கல் சக்திபீடத்தில் நாளை குங்கும வேள்வி
ADDED : செப் 18, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரமங்கலம்:மதுமரங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் உள்ளது. இங்கு, நாளை குங்கும தவ வேள்வி துவங்குகிறது. காலை 7:15 மணிக்கு கோ பூஜை. அதை தொடர்ந்து, குங்குமம் ஊர்வலமாக எடுத்து வந்து, சன்னிதியில் சமர்ப்பித்தல், காலை, மாலை இரு வேளையும் லட்சார்ச்சணை நடைபெற உள்ளது.
மூலவர் சுவர்ண காமாட்சி அம்பாள் குங்கும தவக்கோலத்தில் இருப்பார். செப்.,23ம் தேதி அம்பாளுக்கு சாந்தி அபிஷேகம், விசர்ஜன பூஜை, மஹா தீபாராதனை நடைபெற உள்ளது.
இதையடுத்து, அன்னபிரசாதம் மற்றும் குங்கும பிரசாதம் வழங்கப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.