/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இ-சேவை மையத்தில் இயங்கும் குண்ணம் வி.ஏ.ஓ., அலுவலகம்
/
இ-சேவை மையத்தில் இயங்கும் குண்ணம் வி.ஏ.ஓ., அலுவலகம்
இ-சேவை மையத்தில் இயங்கும் குண்ணம் வி.ஏ.ஓ., அலுவலகம்
இ-சேவை மையத்தில் இயங்கும் குண்ணம் வி.ஏ.ஓ., அலுவலகம்
ADDED : செப் 22, 2024 02:47 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, சுங்குவார்சத்திரம் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தின் மீது மோதியது. இதில், கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் உடைந்து விழுந்தது.
இதனால், இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆவணங்கள் அனைத்தையும் தற்காலிகமாக கிராம இ- - சேவை மையத்தில் மாற்றப்பட்டு, தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இதனால், குண்ணம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள், பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா பெறுதல் மற்றும் இதர வருவாய் துறை சம்பந்தப்பட்ட சான்றுகள் பெற சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதேபோல, 'இ- - சேவை' மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஆவணங்களை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, வி.ஏ.ஓ., அலுவலகக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.