ADDED : பிப் 09, 2025 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பகுதியின் பல்வேறு கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து, நேற்று முன்தினம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, டீக்கடை வைத்து வியாபாரம் செய்யும், ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், 25, என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனையிட்டனர்.
அப்போது, அக்கடையில் 200 ஹான்ஸ் பாக்கெட்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.