sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செய்யாற்றின் கரையோரம் கற்கள் பதிக்காததால் வயல்களில் தண்ணீர் புகும் அபாயம்

/

செய்யாற்றின் கரையோரம் கற்கள் பதிக்காததால் வயல்களில் தண்ணீர் புகும் அபாயம்

செய்யாற்றின் கரையோரம் கற்கள் பதிக்காததால் வயல்களில் தண்ணீர் புகும் அபாயம்

செய்யாற்றின் கரையோரம் கற்கள் பதிக்காததால் வயல்களில் தண்ணீர் புகும் அபாயம்


ADDED : அக் 25, 2025 11:40 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: செய்யாற்றின் கரையோரம், நீர்வளத் துறையினர் கற்கள் பதிக்காததால், மடம் பகுதி வயல்களில், வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் உருவாகும் செய்யாறு, பெருநகர் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, அனுமந்தண்டலம், சிலம்பாக்கம், வெங்கச்சேரி உள்ளிட்ட ஆற்றுபடுகைகள் வழியாக, திருமுக்கூடல் பாலாற்றில் இணைகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வழியாக செல்லும் செய்யாற்றின் குறுக்கே, தடுப்பணைகள் ஏதும் இல்லாததால், மழைக்கால வெள்ளப்பெருக்கின் போது, செய்யாற்று நீர் வீணாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வயலுார் வங்கக்கடலில் கலக்கிறது.

செய்யாற்றின் குறுக்கே ஏதேனும் ஒரு கிராமத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, 2017ம் ஆண்டு, வெங்கச்சேரியில் தடுப்பணை கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு கட்டி முடித்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த 2021ல் பருவ மழைக்கு செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இந்த தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிந்தது. அப்போது, தடுப்பணை வழியாக வெளியேறும் தண்ணீரால், காவாந்தண்டலம், வயலுார் உள்ளிட்ட ஏரிகள் நிரப்பப்பட்டன.

தடுப்பணை ஷட்டரில், லேசான தண்ணீர் கசிவு காரணமாக, அணையில் தண்ணீர் தேங்க முடியாமல், வீணாக வெளியேறி வந்தது. பயன்பாட்டிற்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே தடுப்பணை சேதம் அடைந்துவிட்டது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கு, நீர்வளத் துறையினர் மறுப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், தடுப்பணையோரம் கருங்கற்கள் கொட்டி பராமரிப்பு பணி செய்தனர். எனினும், நிரந்தரமாக சீரமைப்பு பணிக்கு நிதி கேட்டு பரிந்துரை செய்திருந்தனர்.

காவாந்தண்டலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் சீரமைப்பு பணி மற்றும் வெங்கச்சேரி தடுப்பணை சீரமைக்கும் பணிக்கு என, 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

தற்போது, சிலாம் பாக்கம் கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே, அனுமந்தண்டலம் பகுதியில் தடுப்பணை கட்டி உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.

வெங்கச்சேரி தடுப்பணைக்கும், சிலாம்பாக்கம் தடுப்பணைக்கும் இடையே, 3 கி.மீ., இடைவெளி உள்ளது. அதேபோல, சிலாம்பாக்கம் தடுப்பணைக்கும், அனுமந்தண்டலம் தடுப்பணைக்கும் இடையே, 5 கி.மீ., உள்ளது.

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, ஒவ்வெரு தடுப்பணைக்கும் இடையே பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேங்குகிறது.

இதில், வெங்கச்சேரி தடுப்பணைக்கும், சிலாம்பாக்கம் தடுப்பணைக்கும் இடையே, செய்யாற்றின் கரையோரத்தில் இருக்கும் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, வெங்கச்சேரி தடுப்பணைக்கும், சிலாம்பாக்கம் தடுப்பணைக்கும் இடையே இருக்கும், மடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதனால், செய்யாற்றின் கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில், பாறாங்கற்கள் வாயிலாக தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, சிலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ் கரன் கூறியதாவது:

செய்யாற்றில், வெங்கச்சேரி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால், மடம் கிராமத்தில் இருக்கும் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்குகிறது.

இதை சரி செய்ய, செய்யாற்றின் கரையோரம், இருபுறமும் மண் அரிப்பை தடுக்கும் வகையில், கற்கள் வாயிலாக தடுப்பு ஏற்படுத்தலாம்.

அதேபோல, சிலாம்பாக்கம் தடுப்பணைக்கும், அனுமந்தண்டலம் தடுப்பணைக்கும் இடையே செல்லும், நீர்வரத்துக் கால்வாயை சீர் செய்தால், மலையாங்குளம் ஏரிக்கு செல்லும் தண்ணீரை சேமிக்க முடியும்.

இதை நீர்வளத் துறையினர் ஆய்வு செய்து, வெள்ளப்பெருக்கு காலங்களில் ஏற்படும் தண்ணீர் வீணடிப்பதை சரி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர் வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெங்கச்சேரி தடுப்பணை கரையின் இரு புறமும் தலா 1 கி.மீ., கற்கள் பதித்துள்ளோம்.

தற்போது 5,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us