/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
/
ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்
ADDED : செப் 18, 2024 08:42 PM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகள் சார்ந்து ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கம் ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிகள் வழங்கப்படுகிறது.
இப்பதவிகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுப்பணித் துறை அதிகாரிகள் வாயிலாக நடத்தப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி, ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல நீர்ப்பாசனத் துறை பொறியாளர் மார்கண்டேயன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 ஒன்றியங்களில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 102 ஏரிகளுக்கான, ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வரும் 30-ம் தேதி நடக்கிறது.
அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. இன்று மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில், 33 தலைவர்கள், 140 ஆட்சி மண்டல உறுப்பினர்கள், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியம் ஒருங்கிணைந்து 51 தலைவர்கள், மற்றும் 266 ஆட்சி மண்டல உறுப்பினர்கள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், 18 தலைவர்கள், 74 ஆட்சி மண்டல உறுப்பினர்கள் என, மொத்தம் 582 பதவிகளுக்கு இத்தேர்தல் நடக்கிறது,
இவ்வாறு அவர் கூறினார்.