ADDED : பிப் 17, 2025 01:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன், உலக நன்மைக்காகவும், மாணவ- மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் தேர்ச்சி பெற்று வெற்றி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு, ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது.இதில், லட்சுமி ஹயக்ரீவருக்கு காலை 8:30- 12:00 மணி வரை, மாலை 4:00-7:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இதில், திரளான பள்ளி, கல்லுாரி மாணவியர் கோவிலுக்கு வந்தனர். தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்களுடன், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.