/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னிதியில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
/
லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னிதியில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னிதியில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னிதியில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
ADDED : பிப் 14, 2025 07:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு என, தனி சன்னிதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும், உலக நன்மைக்காகவும், மாணவ- மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் தேர்ச்சி பெற்று வெற்றி பெறவும், கல்வி அபிவிருத்திக்காக கல்வி கடவுளான லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு, ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை பரகால மடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு நாளை காலை 8:30 - 12:00 மணி வரையும், மாலை 4:00-7:00 மணி வரை நடக்கிறது என, துாப்புல் பரகாலமடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.