/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம் விமரிசை
/
லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம் விமரிசை
ADDED : பிப் 13, 2026 05:26 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம் விமரிசையாக நடந்தது.
சென்னை பெரம்பூர் காமாக் ஷி மண்டலி குழு சார்பில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகில் கொல்லா சத்திரத்தில் லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம் நேற்று நடந்தது.
உத்சவத்தையொட்டி நேற்று முன்தினம், மாலை 3:00 மணக்கு லலிதா தோடய மங்கலம், குருத்யானம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, அம்பாள் பூஜை, டோலோத்ஸவம் உள்ளிட்டவை நடந்தது.
நேற்று, காலை 9:00 மணிக்கு மாலை மாற்றி கன்னுாஞ்சல், லாலி, நலங்கு, சிவன் அம்பாள் அலங்காரம், திவ்ய நாமம், கும்மி கோலாட்ட வைபவம், தொடர்ந்து லலிதாம்பிகை திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், காமாக் ஷி மண்டலி குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

