/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மோதி மணமகன் தாய் பலி சோகத்தில் மூழ்கிய திருமண வீடு
/
லாரி மோதி மணமகன் தாய் பலி சோகத்தில் மூழ்கிய திருமண வீடு
லாரி மோதி மணமகன் தாய் பலி சோகத்தில் மூழ்கிய திருமண வீடு
லாரி மோதி மணமகன் தாய் பலி சோகத்தில் மூழ்கிய திருமண வீடு
ADDED : பிப் 21, 2024 11:00 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பட்ரவாக்கம் அடுத்த தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 60. திருவடிசூலம் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா, 53, என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர்.
இவர்களின் இரண்டாவது மகன் ஆனந்திற்கு, இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க குமார் - கோகிலா தம்பதி, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு சென்றனர்.
செங்கல்பட்டு வல்லம் ரயில்வே மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த கோகிலா மீது டாரஸ் லாரி ஏறி இறங்கியது. இதில், கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குமார் லேசான காயத்துடன் தப்பினார். இதனால், திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கோகிலாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், கனரக வாகனத்தின் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.