/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குரூப் - 2 தேர்வுக்கு தாமதமாக வந்தால் அனுமதி இல்லை: கலெக்டர்
/
குரூப் - 2 தேர்வுக்கு தாமதமாக வந்தால் அனுமதி இல்லை: கலெக்டர்
குரூப் - 2 தேர்வுக்கு தாமதமாக வந்தால் அனுமதி இல்லை: கலெக்டர்
குரூப் - 2 தேர்வுக்கு தாமதமாக வந்தால் அனுமதி இல்லை: கலெக்டர்
ADDED : செப் 24, 2025 10:41 PM
காஞ்சிபுரம்:'குரூப் - 2 தேர்வுக்கு தாமதமாக வந்தால் அனுமதி இல்லை' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தேர்வர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம், வரும் 28ம் தேதி, குரூப் - 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வு எழுதும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு அறிவுரைகளை தெரிவித்துள்ளார்.
தேர்வு பற்றி அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்வர்கள், காலை 8:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வர வேண்டும். தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால், தேர்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை அசல் அல்லது ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.
தேர்வு நாளன்று, காலை 6:00 மணி முதல், சிறப்பு பேருந்து வசதிகள், காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.