/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
/
ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ADDED : டிச 05, 2025 06:08 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ம் தேதியிலிருந்து டிசம்பர் 4ம் தேதி வரை, 'உலக நவீன வாசக்டமி வாரம்' அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டும், 'உலக நவீன வாசக்டமி வாரம்' அனுசரிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவ மனைகள் மற்றும் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்த ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக 1,100 ரூபாயும், ஊக்குவிப்பவர்களுக்கு 200 ரூபாயும் வழங்கப் படுகிறது.
இந்த நவீன குடும்பநல சிகிச்சை, பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் செய்யப்படுகிறது. ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்; அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளி, துணை இயக்குநர் சதீஷ்குமார், காசநோய் பிரிவு துணை இயக்குநர் காளீஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

