ADDED : ஜன 04, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே, கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பில் இருந்து, பூக்கடைச்சத்திரம் நோக்கி பொலிரோ கார் நின்று கொண்டிருந்தது. பின்னால் வந்த பேருந்து செல்ல வழி இல்லாததால், சங்கர மடம் அருகே பணியில் இருந்த ஏழுமலை என்ற போலீஸ்காரர், காரை எடுக்க கூறியுள்ளார்.
அப்போது, காரில் இருந்த காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்த வக்கீல் ராஜேஷ், 43, ஏழுமலையுடன் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காவலர் ஏழுமலைக்கு உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிந்து, ராஷேஷை கைது செய்தனர். காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று போலீசார் அவரை ஆஜர்படுத்தி, கிளை சிறையில் ஒப்படைத்தனர். நீதிமன்ற ஜாமினில், சற்று நேரத்தில் அவர் வெளியே வந்ததால், போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.