/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒருங்கிணைந்த கட்டடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஒருங்கிணைந்த கட்டடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த கட்டடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த கட்டடம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 26, 2025 07:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா வளாகத்தில், விரைவு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் என, பல்வேறு நீதிமன்றங்கள் ஒரே வாளகத்தில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், அப்பகுதியில் நீதிமன்ற கட்டடம் இதுவரை கட்டாததை கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று காஞ்சிபுரம் காவலான்கேட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், கலெக்டர் அலுவலகத்தில் நீதிமன்ற கட்டடம் கட்டுவது குறித்து மனுவும் அளித்தனர்.