/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ரயில்வே மேம்பாலத்தில் ஒளி பிரதிபலிப்பான் அமைப்பு
/
காஞ்சி ரயில்வே மேம்பாலத்தில் ஒளி பிரதிபலிப்பான் அமைப்பு
காஞ்சி ரயில்வே மேம்பாலத்தில் ஒளி பிரதிபலிப்பான் அமைப்பு
காஞ்சி ரயில்வே மேம்பாலத்தில் ஒளி பிரதிபலிப்பான் அமைப்பு
ADDED : அக் 09, 2024 12:18 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகில், 54.36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ரயில்வே மேம்பாலம், 2022 ஏப்., 7ல்திறக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னைக்கு பங்வேறு வாகனங்களில் செல்வோர் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி காஞ்சிபுரம் வந்த தமிழக முதல்வரின் வருகையையொட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில், பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தின் மீடியன் மற்றும் தடுப்புச் சுவர்களுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டு கருப்பு நிற பட்டை கோடும் தீட்டப்பட்டு மேம்பாலம் புதுப்பொலிவு பெற்று இருந்தது.
மேலும், பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தின் மீது இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீடியன் மற்றும் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், இருவழி பாதையில் உள்ள மீடியன் மீதும், தடுப்புச்சுவரிலும், இரவு நேரத்தில், ஒளிரும் வகையில், மஞ்சள் நிறத்தில் ஒளிபிரதி பலிப்பான் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் வாயிலாக, ரயில்வே மேம்பாலம் வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், மீடியன் மீதும், தடுப்புச்சுவரின் மீது வாகனம் மோதி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.

