/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் அரைகுறையாக ஒளிரும் மின்விளக்குகள்
/
அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் அரைகுறையாக ஒளிரும் மின்விளக்குகள்
அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் அரைகுறையாக ஒளிரும் மின்விளக்குகள்
அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் அரைகுறையாக ஒளிரும் மின்விளக்குகள்
ADDED : நவ 30, 2024 12:25 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளைத்தில், அண்ணா நுாற்றாண்டு நினைவையொட்டி, 2011ம் ஆண்டு, 2.50 கோடி ரூபாய் செலவில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், சிறுவர்களுக்கான ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள். நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, டைல்ஸ் பதித்த நடைபாதை, செயற்கை நீரூற்று, அழகிய புல்வெளி, அலங்காரம் மற்றும் உயர்கோபுர மின்விளக்கு, இருக்கை வசதி, ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
பிள்ளையார்பாளையம் மட்டுமின்றி காஞ்சிபுரம் நகரவாசிகளும் பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், மின்விளக்குகள் பல பழுதடைந்து அரைகுறையாக ஒளிர்கின்றன. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குள் பல பழுதடைந்து உள்ளதால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், மாலை 6:30 மணிக்கு மேல் பாம்பு, தேள், பூரான், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால், பூங்காவில் விளையாடும் சிறுவர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சத்துடன் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் சமூக விரோத செயலும் அரங்கேறும் சூழும் நிலை உள்ளது.
எனவே, பிள்ளையார்பாளையம் உள்ள அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்காவில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.