/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடிரூ.5.02 கோடி!:காஞ்சியில் நஷ்டமடைந்த பல்வேறு நிறுவனங்கள்
/
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடிரூ.5.02 கோடி!:காஞ்சியில் நஷ்டமடைந்த பல்வேறு நிறுவனங்கள்
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடிரூ.5.02 கோடி!:காஞ்சியில் நஷ்டமடைந்த பல்வேறு நிறுவனங்கள்
அரசு துறைகள் போல் தொழிற்சாலைகளிலும் மோசடிரூ.5.02 கோடி!:காஞ்சியில் நஷ்டமடைந்த பல்வேறு நிறுவனங்கள்
ADDED : டிச 20, 2024 01:47 AM

காஞ்சிபுரம்:அரசு துறைகளில் நடக்கும் மோசடி, ஊழல் போன்று, தனியார் தொழிற்சாலைகளிலும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதால், சமீபகாலமாக நிர்வாகத்தினருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம், பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகால் உள்ளிட்ட ஏழு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன. தொழிற்சாலைகள் நிறைந்த இம்மாவட்டத்தில், சமீபகாலமாக ஊழியர்களின் முறைகேடு, மோசடி போன்ற காரணங்களால், நிறுவனங்கள் பெரும் நஷ்டமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது, தனியார் தொழிற்சாலைகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரையிலான ஒரே ஆண்டில், ஐந்து தொழிற்சாலைகளில், பல்வேறு வகையிலான மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் இந்த மோசடி சம்பவங்களால், தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தனியார் தொழிற்சாலைகளில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு இது சிக்கலை ஏற்படுத்துகிறது.
இவற்றை தடுக்க, பண பரிமாற்றம் செய்யும்போது ஊழியர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை விட, கூட்டு முடிவுகளை எடுப்பதும், பாஸ்வேர்ட், ஓ.டி.பி., போன்ற பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக, தொழிற்சாலைகளின் நிதித்துறை ஊழியர்கள் மீது, நிர்வாகம் தனி கவனம் செலுத்துகிறது.
சில தொழிற்சாலைகள் இதுபோன்ற மோசடி விவகாரங்களை காவல் துறையிடம் புகார் அளிக்க விரும்புவதில்லை. இதனால், பல மோசடி சம்பவங்கள் வெளியே தெரியாமல் போய்விட்டதாக தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு துறைகளில், அரசின் திட்டங்களில் முறைகேடு, ஊழல் என்ற பிரச்னை அதிகளவில் எழும் சூழலில், தனியார் தொழிற்சாலைகளிலும் நிதி மோசடி, ஊழல், திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், தொழிற்சாலை நிர்வாகிகளுக்கு, இது பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.