/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 69 பேருக்கு ரூ.72 லட்சம் கடனுதவி
/
காஞ்சியில் 69 பேருக்கு ரூ.72 லட்சம் கடனுதவி
ADDED : நவ 08, 2025 12:50 AM
காஞ்சிபுரம்: மகளிர் குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 69 பேருக்கு, 72.81 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், 115வது கண்காணிப்பு மற்றும் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சிவமலர் தலைமை வகித்தார்.
இதில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் முன்னேற்றம் குறித்து, மேலாளர்களிடம் சிவமலர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 69 பேருக்கு, 72.81 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
இதில், திருவள்ளூர் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ, திருத்தணி, மதுராந்தகம் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.

