/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலை வாய்ப்பு முகாமில் ரூ.2.76 கோடி கடன் உதவி
/
வேலை வாய்ப்பு முகாமில் ரூ.2.76 கோடி கடன் உதவி
ADDED : பிப் 17, 2024 11:49 PM

ஸ்ரீபெரும்புதுார், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான மாவட்ட அளவிலான கலந்துரையாடல் சந்திப்பு, படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி ராசி பொறியியல் கல்லுாரில் நேற்று நடந்தது.
இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் தலைமை வகித்தார். முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களின் நிறுவனத்திற்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர்.
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டோருக்கு, பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
இதை தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி ஊராட்சியில், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் மசாலா பொருட்கள் தயாரித்தல் பயிற்சி பெற்ற ஐந்து மகளிருக்கு சான்றிதழ்கள் மற்றும் 28 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்பதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, அரசு அதிகாரிகள், விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.