/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.656 கோடியில் இருந்து ரூ.1,203 ஆக உயர்வு
/
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.656 கோடியில் இருந்து ரூ.1,203 ஆக உயர்வு
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.656 கோடியில் இருந்து ரூ.1,203 ஆக உயர்வு
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது அதிகரிப்பு 4 ஆண்டுகளில் ரூ.656 கோடியில் இருந்து ரூ.1,203 ஆக உயர்வு
ADDED : ஜன 29, 2025 08:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, 52 காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 53 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், ஏழு நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், மூன்று ஊரக வளர்ச்சி கடன் சங்கங்கள், இரண்டு நகர கூட்டுறவு வங்கிகள், 23 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் என, 143 கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்த கடன் சங்கங்களின் வாயிலாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள், மகளிர் குழுவினர், தனிநபர் ஆகியோருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதுதவிர, பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த கடனுதவி வழங்குவதற்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், 80 சதவீதம் மட்டுமே கூட்டுறவு துறை எட்ட முடிகிறது. அதேசமயம், ஆண்டுதோறும் வழங்கப்படும் கூட்டுறவு கடன் சங்கங்களின் கடனுதவி தொகை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கடந்த 2021 - -22ம் நிதியாண்டில், 656.02 கோடி ரூபாய் வழங்கப்பட்ட கடன் தொகை, நடப்பாண்டில், 1,203.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என, கடன்பெறுவோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது:
கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளின் வாயிலாக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் செய்து, கடனுதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது. கடன் கேட்டு விண்ணப்பிக்கும் சில பயனாளிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் போது, பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனால், இலக்கு எட்ட முடிவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

