sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சிகளில் வசூலிக்க வேண்டிய வரி பாக்கி ரூ.19.54 கோடி உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாமல் திணறல் 

/

ஊராட்சிகளில் வசூலிக்க வேண்டிய வரி பாக்கி ரூ.19.54 கோடி உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாமல் திணறல் 

ஊராட்சிகளில் வசூலிக்க வேண்டிய வரி பாக்கி ரூ.19.54 கோடி உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாமல் திணறல் 

ஊராட்சிகளில் வசூலிக்க வேண்டிய வரி பாக்கி ரூ.19.54 கோடி உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாமல் திணறல் 


ADDED : ஜூன் 12, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:

வரியினங்கள் இலக்கு வசூல் நிலுவை

சொத்து வரி 48.53 37.48 11.04குடிநீர் கட்டணம் 8.47 2.93 5.53தொழில் வரி 51.14 48.35 2.78 தொழில் உரிம கட்டணம் 2.60 2.48 0.12 பல்வகை வரியினங்கள் 16.25 16.17 0.07மொத்தம் 126.99 107.41 19.54



ஊராட்சிகளில், 126.99 கோடி ரூபாய் வரி இலக்கு நிர்ணயம் செய்ததில், 107.41 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 19.54 கோடி ரூபாய் வசூலிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

குடிநீர் வரி


காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் குடிநீர் வரி, தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன.

வரியினங்களை குடியிருப்புவாசிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் நேரடியாக சென்று செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், அனைத்து வரியினங்களையும் ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் துவங்கும் நிதி ஆண்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, தொழில் உரிமம், பல்வகை வரியினங்களை அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானத்தின் படி வசூலிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இலக்கு நிர்ணயம் செய்த வரியை வசூலிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் பரிதவித்து வருகின்றன. தொழில் உரிமம், தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை காட்டிலும், குடிநீர் கட்டணம் குறைவான சதவீதத்தில் வசூலிக்கப்பட்டுள்ளன.

இலக்கு


குறிப்பாக, 274 ஊராட்சிகளில், 48.53 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதில், 37.48 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், 11.04 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

அதேபோல, 8.47 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதில், 2.98 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், 5.53 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், பல்வகை வரியினங்கள் என, மொத்தம் 126.99 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், 107.41 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம், 19.54 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

இந்த நிலுவை வரியினங்களை, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் வசூலிக்க முனைப்பு காட்டி வருகிறது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஊராட்சிகளில், விளம்பரம் கட்டணம், ஏல முன் வைப்பு தொகை உள்ளிட்ட கட்டணங்கள் நுாறு சதவீதம் வசூலித்துள்ளோம், தொழில் மற்றும் தொழில் உரிம கட்டணம் 95 சதவீதம் வசூலித்துள்ளோம்.

குடிநீர் கட்டணம் 35 சதவீதம் மட்டுமே வசூலித்துள்ளோம். விரைவில், அனைத்து வரியினங்களையும், 100 சதவீதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரியினங்கள் இலக்கு வசூல் நிலுவை


சொத்து வரி 48.53 37.48 11.04
குடிநீர் கட்டணம் 8.47 2.93 5.53
தொழில் வரி 51.14 48.35 2.78
தொழில் உரிம கட்டணம் 2.60 2.48 0.12
பல்வகை வரியினங்கள் 16.25 16.17 0.07
மொத்தம் 126.99 107.41 19.54








      Dinamalar
      Follow us