/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ' லஞ்சம் ' சேவைகள் பெறுவதில் பகுதிமக்கள் தயக்கம்
/
மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ' லஞ்சம் ' சேவைகள் பெறுவதில் பகுதிமக்கள் தயக்கம்
மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ' லஞ்சம் ' சேவைகள் பெறுவதில் பகுதிமக்கள் தயக்கம்
மாநகராட்சியில் தலைவிரித்தாடும் ' லஞ்சம் ' சேவைகள் பெறுவதில் பகுதிமக்கள் தயக்கம்
ADDED : டிச 17, 2024 12:50 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம், நகராட்சியாக தரம் கடந்த 2021ல் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, கூடுதல் வசதிகள் கிடைப்பதோடு, சாலை, குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
மாநகராட்சி எல்லைக்குள் வசிப்போருக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவது கூடுதல் வசதியாக இருந்தாலும், சொத்து வரி, பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற சேவைகளுக்கு நகரவாசிகள் அணுகும்போது, லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற அவலநிலைக்கும் ஆளாக வேண்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறைக்கு அடுத்தபடியாக, அதிகளவு லஞ்சம் பெறும் இடமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் மாறி வருகிறது.
இதனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு மட்டுமல்லாமல், அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுவது தொடர்கிறது.
வரி விதிப்பு, வரி விதிக்கப்பட்ட பின் மேல்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்வது, புதிய குடிநீர் இணைப்பு, புதிய பாதாள சாக்கடை இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பில் பழுது, வணிக ரீதியிலான கட்டடங்களுக்கு வரி விதிப்பு என, எந்த பணிகளுக்கும், திரைமறைவில் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது.
மாநகராட்சியில் லஞ்சம் கொடுத்து தான் சேவைகளை பெற முடியும் என்பது அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்தவோ, வெளிப்படையான நிர்வாகத்திற்கோ வாய்ப்பில்லாத நிலையே தொடர்கிறது.
மாநகராட்சியின் லஞ்ச லாவண்யம் எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருந்தது என்பதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறையின் கடந்த கால வழக்குகள் பல உதாரணங்களாக உள்ளன.
வரி விதிப்பு, வீடு கட்ட அனுமதி, பட்டா பெறுதல், பிறப்பு சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு தடை இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என, மொபைல் எண் ஒன்றை வெளியிட்டு, மேயர் மகாலட்சுமி பேனர் ஒன்றை வைத்திருந்தார்.
அதேபோல், மாநகராட்சியில் சாலை, குடிநீர், பாதாள சாக்கடை போன்ற எந்த அடிப்படை பிரச்னைக்கும் டோல்ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, எண் ஒன்றை, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர், 2022ல் மாநகராட்சியில் வெளியிட்டிருந்தனர்.
இந்த சேவைகள் நாளடைவில் நீர்த்து போய்விட்டதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி அலுவலகம் வாயிலாக ஒரு சேவையை இலவசமாக பெறுவதற்கு, நகரவாசிகள் அச்சமடைகின்றனர். புரோக்கர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் லஞ்ச லாவண்யம், பெரும் தொந்தரவாக இருப்பதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற தொந்தரவுகளை குறைக்கவும், வெளிப்படையான சேவைகளை மேம்படுத்திடவும், மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

