/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
/
பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி
ADDED : டிச 30, 2025 06:01 AM

கா ஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பறை, கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் வசிப்பவர்களும் இந்த கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இருமாதங்களாக பொது கழிப்பறை பூட்டியே உள்ளது.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கைலாசநாதர் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கழிப்பறை பூட்டி உள்ளதால் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, கைலாசநாதர் கோவில் அருகில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ராமகிருஷ்ணன், சென்னை.