தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அனுமதியின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


UPDATED : ஜூன் 17, 2026 08:46 PM

ADDED : ஜூன் 17, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 08:46 PM ADDED : ஜூன் 17, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அருகே ஆவணங்கள் இல்லாமல் தேக்கு உள்ளிட்ட கலப்பு மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரியை நேற்று பறிமுதல் செய்து வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

உத்திரமேரூர் - புக்கத்துறை நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பொறியியல் கல்லுாரி அருகே மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி ஒன்றினை மடக்கி உத்திரமேரூர் வனச்சரக அலுவலர் ராமதாஸ், வனவர் உருமரா, வனக்காப்பாளர் யுவராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையிட்டனர்.

லாரியில் அனுமதி மற்றும் ஆவணங்கள் ஏதுமின்றி தேக்கு, வில்வம், வேம்பு, புளியன் உள்ளிட்ட 14,000 கிலோ கலப்பு மரக்கட்டைகள் இருந்ததை கண்டறிந்தனர்.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன், 52, என்பவர், ஓட்டி வந்த லாரி அவருக்கு சொந்தமானது எனவும், இதை சென்னைக்கு மரக்கட்டை வியாபாரம் செய்ய லாரியில் ஏற்றி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

முறையான அனுமதி மற்றும் உரிய ஆவணங்களின்றி மரக்கட்டைகள் ஏற்றி சென்றதாக வனத்துறையினர் லாரியை பறிமுதல் செய்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

சில மர வியாபாரிகள், மரங்கள் பராமரிக்கும் விவசாயிகளை வற்புறுத்தி தங்கள் சுய வருமானத்திற்காக மரங்களை வெட்டி கடத்துகின்றனர். இதனால், பருவநிலை மாற்றம், புவி வெப்பம் அடைதல், ஆக்ஸிஜன் மற்றும் பசுமை குறைதல், மழையின்மை போன்ற விளைவுகள் சந்திக்க நேரிடும்.

எனவே, மரங்களை பராமரிப்பதில் மக்கள் வழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உத்திரமேரூர் வனசரகர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us