ADDED : டிச 17, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கூட்ரோடு பகுதியில், காஞ்சிபுரம் சுரங்கத்துறையினர், தனி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில், நேற்று காலை 9:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, டிப்பர் லாரி உரிய ஆவணம் இன்றி, கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்த சுரங்கத்துறையினர், பெருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார்விசாரிக்கின்றனர்.