sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சலுான் கடையில் உரசி நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

/

 சலுான் கடையில் உரசி நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

 சலுான் கடையில் உரசி நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

 சலுான் கடையில் உரசி நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்


ADDED : பிப் 13, 2026 05:29 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, மணிக்கூண்டு சந்திப்பில், வளைவில் உள்ள சலுான் கடை மீது உரசி நின்ற 'டிரெய்லர்' லாரியால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் பஜார் வழியாக, திருவள்ளூர் நோக்கி, இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை 'டிரெய்லர்' லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, காலை 8:15 மணியளவில், மணிக்கூண்டு சந்திப்பில், திருவள்ளூர் சாலையில் திரும்பிய போது, 'டிரெய்லர்' லாரியின் பின்புறம், சந்திப்பில் உள்ள சலுான் கடை மீது உரசியது.

இதில், சலுான் கடையின் சுவர் லேசாக இடிந்து நொறுங்கியது. இதனால், திருவள்ளூர் சாலை, காந்தி சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை நேரம் என்பதால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், மணிக்கூண்டு திருப்பத்தில் நின்றிருந்த 'டிரெய்லர்' லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி காலை 10:30 மணியளவில் போக்குவரத்தை சரி செய்தனர்.






      Dinamalar
      Follow us