/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் ஒயரில் லாரி உரசி டிரைவர் உயிரிழப்பு
/
மின் ஒயரில் லாரி உரசி டிரைவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 03, 2025 07:32 PM
ஸ்ரீபெரும்புதுார்:துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 38, லாரி ஓட்டுனர். ஒரகடத்தில் தங்கி லாரி ஓட்டுனர் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வாலாஜாபாத் பகுதியில் இருந்து, சவுடு மண் ஏற்றி கொண்டு, ஒரகடம் அருகே வெண்பாக்கம் கிராமத்திற்கு வந்தார்.
வெண்பாக்கம் கூட்டுறவு வங்கி பின்புறம், சவுடு மண்ணை கொட்டும் போது, லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக அருகே உள்ள மின் ஒயரில் உரசியது.
இதில், லாரி முழுதும் மின்சாரம் பரவியத்தில், ஓட்டுனர் இருக்கையில் இருந்த பாலமுகன் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தின் அவரை மீட்டு, பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.