ADDED : மே 20, 2025 08:48 PM
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த, சோகண்டி டாஸ்மாக் அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று காலை, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ், இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அப்பெண் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் அப்பெண், வேலுார் பகுதியைச் சேர்ந்த கெளசல்யா, 22, என்பதும், ஸ்ரீபெரும்புதுார் பாரதி நகரைச் சேர்ந்த காதலன் அபினேனஷ், 24, என்பவருடன் சேர்ந்து சுங்குவார்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 30,000 ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.