/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி புத்தேரியில் விபத்து அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பி புத்தேரியில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி புத்தேரியில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி புத்தேரியில் விபத்து அபாயம்
ADDED : டிச 17, 2024 01:00 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி ஊராட்சியில் புத்தேரி துணை கிராமத்தில், காலனி சுடுகாட்டிற்கு செல்லும் சிமென்ட் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக புத்தேரி, புத்தேரி காலனி, வேளியூர், மணியாட்சி ஆகிய கிராமத்தினர், விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இதுதவிர, புத்தேரி ஏரி உபரி நீர் வெளியேறும் கலங்கல் வழியாக, மணியாட்சி கிராமத்திற்கு செல்வதற்கு ஏரிக்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுடுகாட்டில் கைக்கு எட்டும் தொலைவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
இதனால், புத்தேரி காலனி ஏரிக்கரை வழியாக செல்லும் டிராக்டர்மற்றும் மாட்டு வண்டி ஆகியவாகனங்களில் விளைபொருட்களை ஏற்றி செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
எனவே, புத்தேரி காலனி சுடுகாட்டில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.