குறைந்த மின்னழுத்த பிரச்னை காட்டாங்குளம் கிராம மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை காட்டாங்குளம் கிராம மக்கள் அவதி
ADDED : செப் 21, 2026 03:50 AM
உத்திரமேரூர்: காட்டாங்குளம் கிராமத்தில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு இளையனார்வேலுார் மின் பகிர்வு மையம் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இரண்டு மாதங்களாக இப்பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது.
இதனால், 'டிவி, ஏசி' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மின் மோட்டார் அடிக்கடி பழுதாகி குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, காட்டாங்குளம் கிராமத்தில் நிலவும், குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண, மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
