/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை ஊத்துக்காடு மக்களினர் அவதி
/
குறைந்த மின் அழுத்த பிரச்னை ஊத்துக்காடு மக்களினர் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்னை ஊத்துக்காடு மக்களினர் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்னை ஊத்துக்காடு மக்களினர் அவதி
ADDED : ஏப் 08, 2025 12:48 AM
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் ஜே.எஸ்.நகர்., உள்ளது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு பகுதியில், சில நாட்களாக வீடுகளுக்கான மின் இணைப்பில் குறைந்த மின் அழுத்த பிரச்னை நிலவுகிறது.
இதனால், இரவு நேரங்களில் டியூப் லைட் ஒளிராமலும், 'டிவி', குளிர்சாதன பெட்டி, 'ஏசி' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன.
தற்போது கோடைக்காலம் என்பதால் மின்விசிறிகளின் இயக்கம் அதிகம் தேவையான நிலையில், குறைந்த மின் அழுத்த பிரச்னையால் மின்விசிறிகள் வேகமாக சுழல்வது சிக்கலாக உள்ளதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
எனவே, ஊத்துக்காடு ஜே.எஸ்., நகரில் நிலவும், குறைந்த மின் அழுத்த பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.