தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குறைந்த மின்னழுத்த பிரச்னை: ஊத்துக்காடில் மக்கள் அவதி

குறைந்த மின்னழுத்த பிரச்னை: ஊத்துக்காடில் மக்கள் அவதி

குறைந்த மின்னழுத்த பிரச்னை: ஊத்துக்காடில் மக்கள் அவதி


UPDATED : மே 17, 2026 05:06 PM

ADDED : மே 17, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 05:06 PM ADDED : மே 17, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலாஜாபாத்;ஊத்துக்காடில் நிலவும் 'குறைந்த மின்னழுத்த பிரச்னையால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்திற்கு வாலாஜாபாத் மின் பகிர்வு மையம் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊத்துக்காடு குடியிருப்பில் காந்தி நகர், அம்பேத்கார் நகர், நடுத்தெரு மற்றும் வேப்பஞ்சாலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக வீடுகளுக்கான மின் இணைப்பில் குறைந்த மின்னழுத்தப் பிரச்னை நிலவுகிறது.

இதனால், இரவு நேரங்களில் டியூப் லைட் ஒளிராமலும், எல்இடி., டி.வி., குளிர் சாதன பெட்டி, ஏ.சி., உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் நிலவுகிறது. தற்போதைய கோடைக்காலத்தில் இரவு நேரங்களில் மின்விசிறி வேகமற்று சுழல்வதால் புழுக்கம் அதிகரித்து அவதிபடுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஊத்துக்காடில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us