/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை கொருக்கந்தாங்கல் மக்கள் அவதி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை கொருக்கந்தாங்கல் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை கொருக்கந்தாங்கல் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை கொருக்கந்தாங்கல் மக்கள் அவதி
ADDED : ஆக 19, 2025 10:23 PM
உத்திரமேரூர்:கொருக்கந்தாங்கலில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சி, கொருக்கந்தாங்கல் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்து வருகிறது. இதனால், இந்த குடியிருப்புகளில் உள்ளவர்கள், எலக்ட்ரானிக் பொருட்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இப்பகுதியில் மின்மாற்றி அமைக்க கிராம மக்கள் நீண்ட நாட்களாக, மின் வாரியத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், புதிய மின்மாற்றி அமைக்க தீர்மானம் இயற்றப்பட்டு, மின் வாரியத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்பகுதியில் மின்மாற்றி அமைப்பதற்காக மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டன.
ஆனால், இதுவரை மின் கம்பங்கள் நடப்படாமலே உள்ளன. எனவே, குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்க, மின்மாற்றி அமைக்க, மின் வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொருக்கந்தாங்கல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.