/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை கூழாங்கல்சேரி மக்கள் அவதி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை கூழாங்கல்சேரி மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை கூழாங்கல்சேரி மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை கூழாங்கல்சேரி மக்கள் அவதி
ADDED : ஏப் 16, 2025 06:54 PM
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழாங்கல்சேரி கிராமம், வசந்தம் நகர் பகுதியில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மின் நுகர்வும் அதிகரித்து வருகிறது. இதனால், ஆறு மாதங்களாக குறைந்த மின்னழுத்த பிரச்னையால் இப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர்.
தற்போது, கோடைக்காலம் என்பதால், குறைந்த மின்னழுத்தம் மேலும் அதிகரித்து, மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. மேலும், குழந்தைகள், வயதானோர் என, தவித்து வருகின்றனர்.
எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பகுதியில் சீரான மின் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.