/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை இல்லாத மதுார் கூட்டுச்சாலை
/
நிழற்குடை இல்லாத மதுார் கூட்டுச்சாலை
ADDED : டிச 09, 2025 06:38 AM

மதுார்: மதுார் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலையில் மதுார் கூட்டுச்சாலை உள்ளது. மதுார், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம், அருங்குன்றம், பட்டா, பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிறுத்தம் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து உத்திரமேரூர், காஞ்சிபுரம், சாலவாக்கம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில், 30 ஆண்டு களுக்கு முன் கட்டிய பயணியர் நிழற்குடை கட்டடம் பழுதாகி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிந்தது. அதை தொடர்ந்து, இதுவரை மதுார் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், இப்பேருந்து நிறுத்தத்திற்கு வரும் தொழிலாளர்கள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மழை மற்றும் வெயிலில் சிரமப்படுகின்றனர்.
எனவே, மதுார் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

