/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதார நிலைய நுழைவாயிலில் கான்கிரீட் கால்வாய் சேதம் மதுரமங்கலம் நோயாளிகள் 5 மாதங்களாக அவதி

ADDED : நவ 06, 2025 02:08 AM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலத்தில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலைய நுழைவாயிலில் மழைநீர் கான்கிரீட் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டு உள்ளன. ஐந்து மாதங்கள் கடந்தும் இதை சீரமைக்காததால், சுகாதார நிலையத்திற்கு வரும் நோ யாளிகள் மற்றும் கர்ப்பிணியர் அவதி அடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திர த்தை அடுத்த, மதுரமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட் டார சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, மதுரமங்கலம், குணகரம்பாக்கம், கண்ணன்தாங்கல், மகாதேவி மங்கலம், ஏகானபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணியர் மற்றும் நோயாளிகள் நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சுகாதார நிலைய வளாகம் படு மோசமாக உள்ளது. வளாகம் முழுதும் குப்பையும், செடிகள் வளர்ந்தும் உள்ளன. உட்புற சாலைகள் சேதமடைந்து, மழைநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது.
நுழைவாயிலில், ஐந்து மாதங்களுக்கு மேலாக சேதமடைந்து உள்ள கான்கிரீட் கால்வாயினால், சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர், பின்புறம் உள்ள நுழைவாயில் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் சேதமடைந்து உள்ள மழைநீர் கான்கிரீட் கால்வாயை சீரமைத்து, சுகாதார நிலைய வளாகத்தை துாய்மையாக பராமரிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.