/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
/
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 10, 2025 01:11 AM

குன்றத்துார்:குன்றத்துார் அருகே கோவூரில் பழமை வாய்ந்த சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் இக்கோவில் புதன் கிரகத்துக்குரிய பரிகார தலமாக திகழ்கிறது. இங்கு, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், உபயதாரர்கள் மூலமாக சுவாமி சன்னிதி, அம்பாள் சன்னிதி, ராஜகோபுரம், மஹா மண்டபம் மற்றும் உப சன்னிதிகள் அனைத்தும், அண்மையில் புதுப்பித்து கட்டி முடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.